Monday, June 9, 2008

ஓய்ந்ததா ? உலர்ந்ததா ?

அசைந்த மரங்கள்
ஆடினால் ? வீசிய
காற்று சுழற்றினால் ?
பெய்தமழை பேய்மழை
ஆனால் ? வீதி
வெள்ளம் வீட்டினுள் !!!

இடித்த வானம்
கொட்டித் தீர்த்தது !
மின்னிய மேகம்
முழங்கி முடித்தது !
நின்ற மரங்கள்
சாய்ந்து வீழ்ந்தன !
சாரியாய் நின்ற
கார்கள் சரிந்தன !

மின்விளக்கு
மின்னிமறைந்தது !
கதவுகள் படபடக்க
பெயர்ப் பலகைகள்
பெயர்ந்தன !

அடித்து ஊற்றிய
மழையில் ! வீசித்
தீர்த்த காற்றில்
வீடுகள் பறந்தன !
விடுத்த கரங்கள்
நசுங்கி வீங்கின !
விரலின் நுனிகள்
விண்டு வீழ்ந்தன !
என்னே காற்று !!
என்னே மழை !!
எங்கும் வெள்ளப்
பெருக்கு ! இருட்டு
வீதிகள் ! விழிகள்
தேடிய வெளிச்சம் !
ஓடி ஓய்ந்த
கால்கள் ! தேடும்
பாதை தெருவில் !
கையைப் பிடித்து
கண்ணொளி இன்றி
கரும் படலில்
கால்களின் நடை !

ஓய்ந்ததா ? உலர்ந்ததா ?

செல்வி ஷங்கர் - 09062008
-------------------------------------

5 comments:

')) said...

படிங்க - நல்லா இருந்தா சொல்லுங்க

')) said...

//பெயர்ப் பலகைகள்
பெயர்ந்தன !//

ஆஹா பெயரும் வரிகள். அருமை.

//ஓய்ந்ததா ? உலர்ந்ததா ?//

ஓய்ந்து உலர்ந்தது என்று சொல்லலாமா ? :))

')) said...

சதங்கா

நன்றி

ஒய்ய்ந்து உலர்ந்தென்று கொள்ளலாம். ஆனால் எனக்கு எதிர்மறை வினா பிடிக்கும்.

அதனால் தான் ஓய்ந்ததா ? உலர்ந்ததா ?

')) said...

//இருட்டு
வீதிகள் ! விழிகள்
தேடிய வெளிச்சம் !
ஓடி ஓய்ந்த
கால்கள் ! தேடும்
பாதை தெருவில் !
//

அய்யோ! நெஞ்சம் பதைக்கிறது அம்மா.சொற்கள் இயற்கையின் வலிமையையும், இழந்தவர்களின் வலியையும் ஓங்கி உச்சரிக்கின்றன.

வாழ்த்துகள் அம்மா!

பி.கு.:என்ன திடீர்ன்னு வெள்ளம் பற்றி.சும்மாவா அல்லது நான் பத்திரிக்கை படிக்காத்தால், எனக்குக் காரணம் தெரியவில்லையா?

')) said...

புது வண்டே !!

ஒரு நாள் கடுங்காற்றுடன் பெரு மழையும் சேர, அதனால் வீட்டினுள்ளே நடந்த மாற்றங்கள் கவிதையாக மாறின.

//விடுத்த கரங்கள்
நசுங்கி வீங்கின !
விரலின் நுனிகள்
விண்டு வீழ்ந்தன !//

இவ்வலிகளின் விளைவு கவிதை

சிறு காயம் தான் - கவலைப் பட ஒன்றுமில்லை - சரியாய் விட்டது

நலமே